பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290



நிற்கும் பிரம நிரதிசயானந்தம தாய்
நிற்கும் பரம நிருத்தனெவன்?

(திருவரு-52-56)

திருவருட்பாவில் உள்ள நெஞ்சறிவுறுதல் பகுதியாகும்.

உயிர்கட்கு மலப்பிணிப்பினை அகற்றிப் பேரின்பம் நல்கியருளும் சிவமும், அவ்வின்பத்தினை நுகரும் ஆன்மாவும், நுகர்தற் கருவியாகிய உயிர் அறிவும் தனித்து வெளிப்பட்டு தோன்றுதலன்றி நுகர்ச்சியளவில் ஒர் அளவு புலப்பட அமைந்ததே சிவானுபவமென்னும் உண்மை இத்தொடரிற் புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம்.

மேற்குறித்த மூவகை யனுபவங்களுள் முடிந்த அநுபவமாகிய சிவானுபவத்திற்குப் படிநிலையாயமைந்தன, அருளனுபவமும், உயிரனுபவமுமாகும். ஆன்மாவின் அறிவிச்சை, செயல்களை மூடிமறைத்துள்ள ஆணவப்பிடிப்பை அகற்றுதற்குரிய சிவஞானமே அருளனுபவமாகும். அவ் வநுபவத்தை அடைதற்குரிய மருந்துணவாக அமைந்தது உயிரனுபவமாகும். இவ்வுண்மையை 'யான் எனது என்னும் இருவகைப் பற்றும் அறும்படி உறுதியாகப் பற்றிக் கொள்வாயாக இதுவே சத்தியம்' என அடியேனுக்குக் குருவாய் வந்து அறிவுறுத்தருளிய பெருங்கருணைத் திறத்தை எங்ஙணம் எடுத்துரைக்க வல்லேன். இறைவனால் அளிக்கப் பெற்ற முத்துச்சிவிகையில் ஏறி அமர்ந்து அருளாட்சி புரிந்த எனது தலைவனே! என ஞானசம்பந்தப் பிள்ளையாரைப் போற்றுவதாக அமைந்தது,

பொத்தியமூல மலப்பிணி தவிர்க்கும்
     பொருள் அருளனுபவம் அதற்குப்
பத்தியம் உயிரின் அனுபவம் இதனைப்
     பற்றறப் பற்றுதி இதுவே