பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344


காலத்து, அவரவர் செய்தற்குரிய வினைகளையும் அவற்றின் பயன்களையும் அவரவர் தலையில் எழுதி வைப்பான் என்பது நம் சமயத்தவர் நம்பிக்கையாகும். இவ்வாறு எழுதும் பொறுப்புடைய நான்முகன், எங்கள் தலையில் எழுதும் போது 'இறைவனைப் புகழ்ந்து உய்தி பெறுக' என்று எழுதியிருப்பானானால் நாங்கள் உலகில் தகுதியில்லாதாரைப் புகழ்ந்து ஒரு பயனும் பெறாது அலைந்து வருந்தியிருக்க மாட்டோம். இவ்வாறு அலைந்து வருந்தியது எங்கள் குறையன்று. இறைவனாகிய நின்னைப் புகழ்க என்று நான்முகனார் எங்கள் தலையில் எழுதாத குறையேயாகும் என இறைவனை நோக்கி அடிகளார் முறையிட்டுள்ள நயம் வியந்து பாராட்டுதற் குரியதாகும்.

ஆன்ம எழுத்து எனப்படும் 'ய' என்னும் தமிழ் எண்ணாகிய யகரத்தை ஐ (இறைவன்) ஆகிய சிவத்துக்குப் பின்னால் வைத்து ('சிவய' என)ச் செபித்தால் 'ஆ'வுடன் கூடிய ஈரைந்து (பத்தினையும்) ஆபத்தினையும் 'வி'யுடன் கூடிய ஈரைந்து (பத்தினையும்) விபத்தினையும் நீக்கும் ஆற்றல் பெறலாம். ஆவி - ஆன்ம இயல்பினை; ஈர்(கெடுக்கும்) ஐந்து = ஐவகை மலங்களையும் அகற்றலாம் -நீக்கறலாம்-ஆவிக்கு - ஆன்மாவுக்கு உறுதியாகிய, ஈரைந்து-(பத்தினையும் பற்றினையும் - அன்பினையும்) உறாலம்-பொருந்தலாம். (ஐந்தெழுத்தினைச் சேர்த்துச் செபிக்கும் முறையினை) ஆராய்ந்து (ஆவியாகிய) பிராணனது கலைகள் ஈரைந்து (பத்துடன்) ஒர் இரண்டையும் பன்னிரண்டினையும் கழியாமல் சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம் என அறிவுறுத்துவது,

ஆவி யீரைந்தை அபரத்தே வைத் தோதில்
ஆவி யீரைந்தை அகற்றலாம் = ஆவியீர்