பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

349


பொருளாகிய கூத்தப்பெருமானைப் போற்றிய இராமலிங்க வள்ளலார், இறைவனை ஆருயிர்த் தலைவனாகவும் தம்மை அவனது அருள் வேட்ட தலைவியாகவும் கொண்டு (திருவாதவூரடிகள் மேற்கொண் டொழுகிய தலைவன் தலைவி உறவு நிலையில் நின்று) பாடிப் போற்றிய அகத்துறைப்பாடல்கள் திருவருட் பாவில் நிரம்ப இருத்தலை அன்பர்கள் நன்குணர்வார்கள். தம் ஆருயிர் நாயகனாகிய திருவொற்றியூர்ப் பெருமான் பால் காதல்கூர்ந்த தலைவி ஒருத்தி அம்முதல்வன் திரு வீதியில் உலாப் போந்த காட்சியினைக் கண்டு தான் பெற்ற பேற்றினைத் தன் பாங்கிக்கு எடுத்துரைப்பதாக அமைந்தது, திருவருட்பாவிலுள்ள திரு உலாப்பேறு என்னும் பதிகமாகும்.

சேயை அருளுந் திருஒற்றித் தியாகப் பெருமான் வீதிதனில்
தூயபவனி வரக்கண்டேன் சூழ்ந்தமகளிர் தமைக்காணேன்
தாயை மறந்தேன் அன்றியும் என்றனையும் மறந்தேன் தனிப்பட்டேன்
ஏயென் தோழி என்னடிநான் இச்சைமயமாய் நின்றதுவே!

(1498)

என்பது, மேற்குறித்த பதிகத் திருப்பாடல்களுள் ஆறாம் பாடலாகும். இப்பாடலில் 'தாயை மறந்தேன் அன்றியும் என்றனையும் மறந்தேன் தனிப்பட்டேன்' எனவருந் தொடர்:

அன்னையையும் அத்தனையும் அன்றேநீத்தாள்
     அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்