பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

395


இல்லமுதந் திகழ்பெண்ணாக என்பை எழுப்பிய நாள்
சில்லமுதம் பெற்ற தேவரை வானஞ் சிரித்த தன்றே.

(2301)

என்பதாகும்.

"சிறுமையுடைய வானுலக இன்பத்தினையே பெரிதெனக் கருதி அமுதினையுண்டு நெடுநாள் வாழும் தேவர்களாகிய நீவிர் வளமார்ந்த திருமயிலைப் பதியில் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய ஞானத் தமிழாகிய அமுதினைப் பருகி, என்பு பெண்ணுருவாகத் தோன்றிய அமிழ்தனைய பூம்பாவை சிவனருளைச் சிந்தித்திருந்து சிவத்தைச் சேர்ந்தாற் போன்று, தெய்வத் தமிழமுதத்தைப் பருகிச் சிவமாந் தன்மைப் பெரு வாழ்வைப் பெறமுயலாது வீணே காலத்தைக் கழிக்கின்றீர்களே என வானுலகம், தன்னிடத்தே வாழும் தேவர்களை நோக்கி இகழ்ந்து நகைப்பதாயிற்று என்பார், 'வளஞ்சூழ் மயிலையில் அமுதந்திகழ் பெண்ணாக என்பை எழுப்பிய நாள் சில்லமுதம் பெற்ற தேவரை வான ஞ் சிரித்தது' என்றார் வள்ளலார். சில்லமுதம் என்றது நிலையில்லாத சிறிய போகத்தை.

கவுணியப் பிள்ளையார், உமாதேவியார் நல்ல அமுதமாகிய திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கலந்து தர அதனைக் கையிற்கொண்டு பருகி அதனை நாவினால் மறித்து, எல்லாம் வல்ல இறைவனும் அவன் அடியார்களும் தம் செவிகளாற் பருகும் சொல்லமுதமாகத் தந்தருளினார். எங்கள் பிரான் சம்பந்தன் செய்தருளிய இதனைப் புலப்படுத்தும் முறையில் அமைந்தது,