பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402

திருநெறியாவது சித்தசித் தன்றிப்
பெருநெறியாய பிரானை நினைந்து
குருநெறியாம் சிவமாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

(திருமந்திரம்-54)

எனவரும் திருமந்திரப்பாடல் நன்கு விளக்குகிறது.

குருநெறிக் கேஎன்னைக் கூட்டிக்
     கொடுத்தது கூறரிதாம்
பெருநெறிக்கே சென்ற பேர்க்குக்
     கிடைப்பது பேய் உலகக்
கருநெறிக் கேற்றவர் காணற்
     கரியது காட்டுகின்ற
திருநெறிக் கேற் கின்றது
     உத்தரஞான சிதம்பரமே.

(4032)

எனவரும் திருவருட்பாவினாலும் இவ்வுண்மை நன்கு வலியுறுத்தப் பெறுவது காணலாம்.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனப்படும் ஐம்புல உணர்வுகளும் தத்தமக்குரிய நா, கண், மெய், செவி, மூக்கு என்னும் ஐம்பொறிகளில் நிலைத்திராது கலக்க முறவும், இவற்றைச் செலுத்துவதாகிய மனம் தான் செல்லுதற்குரியநெறி இன்னதென்று அறியாது. மயக்க முறவும், மனம் முதலிய அகக்கருவிகள் வாயிலாகவும் மெய் முதலிய புறக்கருவிகள் வாயிலாகவும் பொருள்களை அறிதற்குரிய உயிரின் அறிவு சிதைவுறவும், உடம்பில் வாய்வழியாகக் கோழை மேற்பட்டு வரவும் ஆன்மா அலமரும் இடர் நிலையில் 'அஞ்சற்க' என்று இறைவன் அருள் புரிவான் என்னும் உண்மையினை அறிவுறுத்தும் முறையிலமைந்தது,