பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


திருவடியே நண்ணி அருள் வழங்கும் என்பதும், ஆறு சமயத்தார் செய்யும் வழிபாடுகளெல்லாம் இடைமருதீசனொருவனையே வந்து சார்வன என்பதும் ஆகிய வுண்மையினை,

ஒராதே அஞ்செழுத்து முன்னாதே பச்சிலையுந்
நேராதே நீரும் நிரப்பாதே - யாராயோ
எண்ணுவா ருள்ளத் திடை மருதர் பொற்பாதம்
நண்ணுவா மென்னுமது நாம்.

எனவும்,

அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள்
ஒன்றொன்றோ டொவ்வா. துரைத்தாலும் என்றும்
ஒருதனையே நோக்குவா ருள்ளத் திருக்கும்
மருதனையே நோக்கி வரும்.

எனவும் வரும் திருவிடைமருதூர் மும்மணிக் கோவைச் செய்யுட்களால் திருவெண்காட்டடிகளார் இனிது விளக்கியுள்ளார். இப்பாடல்கள் முற்குறித்த வினாவுக்கு ஏற்ற விடையாதல் காணலாம்.

இங்ங்னம் சிவபெருமான் சமயங்கடந்த தனிமுதற் பொருளாக விளங்கும் மாட்சியினை,

இடத்துறை மாதரோ டீருடம் பென்றும்
நடத்தினை நள்ளிருள் நவிற்றினை யென்றும்
புலியதள் என்பொடு புனைந்தோ யென்றும்
பலிதிரி வாழ்க்கை பயின்றோ யென்றும்
அருவமும் உருவமும் ஆனா யென்றும்
திருவமர் மாலொடு திசைமுகனென்றும்
உளனே யென்றும் இலனே என்றும்