பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


ஒளிப் பிழம்பினனாகப் போற்றும் முறையில் அமைந்ததே திருச்சிற்றம்பலமாகிய தெய்வ சபை என்பதும் ஆகிய உண்மைகள் ஒருவாறு விளக்கப் பெற்றன. இவை திருமூலர் திருமந்திரம் முதலிய சைவத் திருமுறைகளிலும் தாயுமானார் பாடல்களிலும் இடம்பெற்றுள்ளனவேயன்றிப் புதியன அல்ல. இவ்வுண்மைகளைத் திருவுளங் கொண்ட இராமலிங்கவள்ளலார் உலக மக்களை ஆண்டவன் திருவருளில் ஈடுபட்டு உய்தி பெறச் செய்யும் முறையில்,

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப் பெங்கருணை அருட்பெருஞ்சோதி

என்னும் திருமந்திரத்தை மக்களுக்கு உபதேசித்தருளினார்.

தவமான சத்தியஞானப் பொதுவில்
துவமார் துரியஞ் சொருபமதாமே.

எனத் திருமூலரும்,

செப்பரிய சமயநெறி யெல்லாத் தந்தம்
தெய்வமே தெய்வமெனுஞ் செயற்கையான
அப்பரிசா ளருமஃதே பிடித்தா ரிப்பால்
அடுத்த அந் நூல்களும் விரித்தே அதுமானாதி
ஒப்பவிரித் துரைப்ப ரிங்ஙன் பொய் மெய்யென்ன
ஒன்றிலே ஒன்றெனப்பார்ப்ப தொவ்வாதார்க்கும்
இப்பரிசாஞ் சமயமாய் அல்லவாகி
யாதுசமயமும் வணங்கும் இயல்பதாகி.

(தாயுமா-ஆகார-9)

இயல்பென்றும் திரியாமல் இயம மாதி
எண் குணமும் காட்டியன்பால் இன்பமாகிப்