பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கீர்த்தித் திருவகவல் மந்தர மாமலை மயேந்திர வெற்பன், (100) அந்தம்இல் பெருமை அருள்உடை அண்ணல், எம்தமை ஆண்ட பரிசுஅது பகரின் ஆற்றல்அது உடை, அழகு அமர் திருஉரு, நீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும்; ஊனம்தன்னை ஒருங்கு உடன் அறுக்கும் ஆனந் தம்மே, ஆறா அருளியும்; மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன் நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்: அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டருள்பவன் கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும்; (110) மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும், துய மேனி, சுடர்விடு சோதி காதலன் ஆகி, கழுநீர் மாலை எல்உடைத்து ஆக, எழில்பெற, அணிந்தும்; அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்; மீண்டு வாராவழி அருள் புரிபவன் பாண்டி நாடே பழம்பதி ஆகவும், பத்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன் உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் (120) ஆதி மூர்த்திகட்கு அருள்புரிந் தருளிய தேவ தேவன் திருப்பெயர் ஆகவும், இருள் கடிந்தருளிய இன்ப ஊர்தி அருளிய பெருமை அருள்மலை ஆகவும், 120