பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் (I. அகவற்படலம்) நான்காவது போற்றித் திருஅகவல் சகத்தின் உற்பத்தி (தில்லை) நான்முகன் முதலா வானவர் தொழுது எழ, ஈரடியாலே மூவுலகு அளந்து, நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலர, போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமால், அன்று அடி, முடி, அறியும் ஆதரவு.அதனில், கடுமுரண் ஏனம் ஆகி, முன் கலந்து, ஏழ்தலம் உருவ இடந்து, பின் எய்த்து, ஊழிமுதல்வ சய! சய! என்று, வழுத்தியும் காணா மலர்அடி இணைகள், வழுத்துதற்கு எளிதுஆய் வார்கடல் உலகினில் 154 (10)