பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் II விண்ணப்பப் படலம் ஆறாவது நீத்தல் விண்ணப்பம் (பிரபஞ்ச வைராக்கியம்) (உத்தரகோசமங்கை) (கட்டளைக் கலித்துறை) கடையவனேனைக் கருணையினால் கலந்து ஆண்டுகொண்ட விடையவனே விட்டிடுதிகண்டாய் விறல் வேங்கையின்தோல் உடையவனே மன்னும் உத்தர கோசமங் கைக்கு அரசே சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக்கொள்ளே (1) கொள்னர் பிளவு அகலாத் தடம் கொங்கையர் கொவ்வைச் செவ்வாய் விள்ளேன். எனினும் விடுதிகண்டாய் நின்விழுத்தொழும்பின் உள்ளேன் புறம் அல்லேன் உத்தர கோசமங் கைக்கு அரசே கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டு ஆண்டது எக்காரணமே (2) 290