பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



‘நெய்க் குடம் தன்னை மொய்க்கும் எறும்பு’ என்று கூறியதன் உட்பொருள் இதுவேயாகும்.

இவ்வாறு கூறியமையின் இந்த உவமையில் கூறப்பட்ட அனைத்தும் உவமேயத்திற்கு ஏற்றப்பட வேண்டும். நெய்க்குடமாக இருப்பது இறை அனுபவம், அதனை எடுத்துப் பயன்படுத்த விரும்பியவர் அடிகளார். அதனை எடுக்கவும் பயன்படத்தவும் முடியாமல் செய்கின்ற எறும்புகளை ஒத்தவை பொறிபுலன்கள்.

குடத்திலுள்ள நெய்யை எறும்புகள் உண்ணப் புகுந்தால் உண்ண முடியாததோடு, தாமும் நெய்யுள் வீழ்ந்து அழிந்துவிடும். அந்த அச்சத்தினாலேயே எறும்புகள் குடத்தைச் சுற்றி மொய்க்கின்றனவே தவிர நெய்யின் அருகே செல்வதில்லை.

அடிகளாரின் ஆன்மா இறையனுபவம் என்ற நெய்க்குடத்தைப் பயன்படுத்தச் சித்தமாக உள்ளது. ஆனால், பொறிபுலன்கள் ஆகிய எறும்புகள் அக்குடத்தை எடுக்கவோ பயன்படுத்தவோ இடங்கொடுக்கவில்லை.

நெய்யை உண்ண விரும்பி, அதனுள் புகுந்த எறும்புகள் அதில் மூழ்கி அழியுமாப்போலே, இப்பொறி புலன்கள் இறையனுபவத்தில் மூழ்கினால் தம்மை முற்றிலுமாக இழக்க நேரிடும். இவை தம்மை இழக்கச் சித்தமாக இல்லை.

தாம் உண்ணாவிடினும் பயன்படுத்துபவர் நெய்க் குடத்தை எடுக்க விரும்பினால் அதற்கும் இடங்கொடாமல் குடத்தைச் சுற்றி மொய்க்கும் எறும்புகளைப்போல இப் பொறிபுலன்களும் செயல் புரிகின்றன.

அடிகளாரின் ஆன்மா, இறையுணர்வு ஆகிய நெய்க் குடத்தை எடுத்துப் பயன்படுத்த விரும்பினாலும், இப்-