பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை • 233


போனாலும் குவளை, செம்பு, தவலை என்பவற்றைக் கொண்டுசெல்பவர்கள் அப்பாத்திரங்களுக்கு ஏற்பத்தான் நீரை முகக்க முடியும். இதே கருத்தை அடிகளாரும்,

வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை

வாரிக்கொண்டு

விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் விதி

இன்மையால்

(திருவாச:417)

என்று பாடியுள்ளதில் காணலாம்.

‘உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொழிந்தோம்’ என்பதால் நின் அருள் காரணமாகப் பல படிகளில் முன்னேறுபவர்கள்போல நாமும் அந்தப் படிகளைக் கடந்து, இப்பொழுது இறுதி நிலைக்கு வந்துவிட்டோம்’ என்பதும் பொருளாயிற்று.

உய்ந்தொழிந்தோம் என்று கூறியதால், நாங்கள் உய்ந்துவிட்டோம் என்று கூறுவது, தற்புகழ்ச்சியின் பாற்பட்டதாகிவிடுமோ என்று ஐயுறத் தேவையில்லை. ‘இறுமாந்து இருப்பன் கொலோ ஈசன்தன் பல்கணத்து எண்ணப்பட்டு’ (திருமுறை:49.11) என்று நாவரசர் கூறியது இங்கு நோக்கத்தக்கது. அவன் திருவருளால் உய்கதி அடைந்துவிட்டோம் என்று பேசும்போது அங்குத் தற்புகழ்ச்சிக்கோ தருக்கடைவதற்கோ இடமில்லை என்க.

அடுத்து நிற்பது ‘எய்யாமல் காப்பாய்' என்பதாகும். ‘ஐயனே! எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தேன்; இனிப் பிறப்பெடுத்து அடையவேண்டியது ஒன்றுமில்லை. மறுபடியும் பிறப் பெடுத்து இளைத்துவிடாமல் எம்மைக் காப்பாயாக’ என்று வேண்டுகின்றனர்.