பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


அகவல்களைப் பாடும் புதுமையை மேற்கொண்டவர் அடிகளார்.

ஆனால், அவரேகூடப் பக்தி உணர்ச்சியை- அனுபவ வெளிப்பாட்டை வெளியிட ஆசிரியப்பாக்கள் இடம் தரவில்லை என்பதை உணர்ந்தார்போலும். அதனாலேயே அகவல் பாடல்களுக்கு அதிக இடம் தராமல் விருத்தப் பாக்களைக் கையாளுகிறார்.

விருத்தப் பாக்களில் வெளியிடும் உணர்ச்சியை ஆசிரியப்பாக்களில் கொண்டுவருதல் கடினம். அடிகளாரின் சதகத்தின் முதல் பாடலாகிய 'மெய்தான் அரும்பி’ என்று தொடங்கும் பாடலை ஆசிரியப்பாவாக மாற்றிப் பாடிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். முன்னர் உள்ள நான்கு அகவல்களில் எந்தப் பகுதியும் ‘மெய்தான் அரும்பி’ என்ற பாடலுக்கு இணையான உணர்ச்சி வெளிப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பது தெரியவரும்.

திருவாசகம் இன்று பதிக்கப்பெற்றுள்ள நிலையில் அகவற்பாக்கள் நான்கும் முடிந்த நிலையில் திருச்சதகம் வைக்கப்பெற்றுள்ளது. சதகம் நூறு முடிந்தவுடன் நீத்தல் விண்ணப்பம் இருப்பதற்குக் காரணம் அது ஐம்பது பாடல்களுடன் இருப்பதுதான் என்று இக்காலத்தில் பலரும் உரை கூறியுள்ளனர். அந்த வைப்புமுறைக்குக் காரணம் நூறு, ஐம்பது, இருபது, பத்துப்பாட்டுக்கள் என்ற முறையில் பதிகங்கள் அமைந்திருப்பதால் இவ்வாறு வைக்கப்பெற்றுள்ளன என்று கூறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை எதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

திருப்பெருந்துறை அனுபவத்திலிருந்து மீண்ட அடிகளாருக்குப் பெரும் அதிர்ச்சியும் அச்சமும் தோன்றின. தம்பால் உள்ள ஏதோ ஒரு குறை காரணமாகத் தம்மை