பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


பேற்றைப் பெற்ற தாம் புகுதல் பொருத்தமன்று என்று நினைக்கின்றார். அந்த நினைவு 'புகவே தகேன் உனக்கு அன்பருள் யான்' (14) என்ற தொடராக வெளிப்படுகிறது.

தமக்கோ தகுதியில்லை. ஆனால், அத்தகுதியை முழுவதும் படைத்தவர்களிடையே சில நேரம் தங்கி இருக்குமாறு செய்தார் குரு. அவ்வாறு அவர் செய்தது ஒரு நாடகம் போன்றுள்ளது என்று நினைக்கின்றார் அடிகளார். இது எவ்வாறு நாடகமாயிற்று அடுத்த வேளைச் சோற்றுக்கில்லாதவனை, நாடகம் முடிகின்றவரை அரசன் வேடத்தில் இருத்துவதுதான் நாடகத்தின் இயல்பு. அதேபோலத் தகுதியற்ற தம்மைத் தக்கார் ஊடே இருத்தியதை நாடகம் என்று நினைக்கின்றார்.

அடுத்துள்ள தலைப்பு 'அறிவுறுத்தல்' ஆகும். பதினான்காம் பாடலில் குருநாதர் செய்தது நாடகம் என்று பேசிய அடிகளார் 15-ஆம் பாடலில் நாடக வேடதாரிகள் இடையே ஒரோவழி நடைபெறுகின்ற புதுமையைப் பேசுகின்றார். நாடகத்தில் வேடம் அணிபவர்கள் பெரும்பாலும் தம்மை மறப்பதில்லை. ஒரோவழி ஒரு சிலர் தாம் யார் என்பதை மறந்து வேடத்திற்கு ஏற்ற பாத்திரமாகவே மாறுகின்றார்கள். அவ்வாறு மாறிவிட்ட நிலையில் பொருந்தாத சில செயல்களைச் செய்ததாகக் கேள்விப்படுகிறோம். காரணம் மிக எளிதாக விளங்கும். சில மணித்துளிகள் தம்மை மறந்து பாத்திரமாக ஒன்றிவிட்ட நிலையில் நிகழ்வதாகும் இது.

இத்தகைய ஒரு நிலையைத்தான் அடிகளார் பதினைந்தாம் பாடலில் குறிப்பிடுகிறார். குருநாதர் நிகழ்த்திய நாடகத்தில் உண்மை அடியார்களிடையே சிறிது நேரம் அடிகளாரையும் இருக்குமாறு செய்தார். தாம் திருவாதவூரர் என்பதையும் அமைச்சர் என்பதையும் மறந்து அடியார்களிடையே இருந்த சில நேரத்தில், அவர்களைப் போல் தாமும் வீடுபேற்றை அப்பொழுதே அடைந்துவிட