பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 383


பெறப்பட்டது. யோக நித்திரை என்று சொல்லப்படும் இந்தச் சமாதிநிலையிலிருந்து எழுந்த அவள், பேசிய பேச்சுக்களையும் உடன் வந்த தோழிமார்களுக்கு இறைவனின் சிறப்பைக் கூறிய முறையையும் இதுகாறும் கண்டோம்.

அடுத்து ‘ஓர் ஒரு கால்....’ என்று தொடங்கும் பாடல் அந்தத் தலைவியை வேறொரு கோணத்தில் காட்டுகின்றது. இப்பொழுது அவள் பேசவில்லை. உடன் இருந்த தோழிமார்கள் அவள் பேசிய பேச்சைக் கேட்டு வியப்படைந்தனர். இவள் தங்கள் பழைய தோழிதானா என ஐயுற்று வியந்தனர். இப்பொழுது அவர்கள் தத்தம் பொறி, புலன்களை ஒருமுகப்படுத்தி, தத்தம் பொறியறிவு முழுவதையும் கண்ணின்மூலம் செலுத்தி, தலைவியை மறுமுறை நோக்குகின்றனர். இப்பொழுது அவர்கள் தலைவியைப் பார்க்கவோ காணவோ விளிக்கவோ இல்லை. அதற்குப் பதிலாக அவளைக் கூர்ந்து நோக்கினர். அவர்கள் பார்வையிற் பட்டு, அவர்கள் உள்ளத்தில் பதிந்த தலைவி உருவம் அடிகளாரால் 'ஓரொருகால்..’ என்ற பாடலில் வரையப்படுகிறது.

அடுத்துவரும் 171, 172 ஆகிய இரு பாடல்களும் தலைவியின் சிந்தனை ஓட்டத்தில் ஒரு புதிய திருப்பத்தைக் காட்டுகின்றன. 'பாதாளம் ஏழினும் கீழ்ப் பாதமலர்’ (164) என்றும் 'பேதை ஒருபால்’ (164) என்றும் 'திருமேனி ஒன்றல்லன்' (164) என்றும், பிரபஞ்சத்தைப் 'படைத்தும் கரந்தும் விளையாடுபவன் (166) அவன் என்றும் பேசத் தொடங்கிய தலைவி, அவனுடைய எளிவந்த தன்மையை நினைவுகூரும் வகையில் ஒரு 'தோழன் தொண்டருளன்’ (64) என்று தோழியருக்கு முன்னர் நினைவுறுத்திய அந்தத் தலைவி, இப்பொழுது இவ்விரு (17, 172) பாடல்களிலும் திருவடிப் பெருமை பேசுகிறாள். 'பாதாளம் ஏழினும் கீழ்ச் சொல்லுக்கு அடங்காமல் தாண்டிச்செல்லும் அப்பாதமலர்