உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி

6 தவிர்த்து நற்செயல்களைச் செய்ய ஈடுபடுவார். விதிவசத்தால் ஏற்படும் சுகதுக்கங்களால் பாதிப்பை அடையாமல் தன் கடமைகளில் ஈடுபடுவார். சித்தசுத்தி நன்கு அமைந்து ஞான யோகத்திற்கு உரிமையுடையவராகச் செய்யும் ஞானயோகத்தால் ஈசுவரன் உலகம் இந்த இரண்டின் தத்துவத்தை உணர்ந்தவர்கள் அடியார்களாக ஆகின்றார்கள். இறைவனது வழிபாட்டில் பக்தி எனும் அன்பு மிகவும் துணைபுரிகிறது. பக்தியும் சிறுகச் சிறுக வளர்ந்து வலிவு பெறுகிறது. பக்தி வலிவு பெறவும், நிலைத்து இருக்கவும் இறைவனைப் பற்றிய அறிவு பெரிதும் துணைபுரிகிறது. இறைவனின் நாமம் உலகிற்கு மங்களத்தைச் செய்வது. அது வெளிப்படும்போது நமது பாபங்கள் அனைத்தையும் போக்கி விடுகிறது. ஆதவன் உதித்தவுடன் கடல்போன்ற இருட்டைப் போக்குவது போல் என்கிறார் பகவந்நாமகௌமுதியில் லக்ஷ்மிதரர். அத்தகைய பெயர்களில் சில இறைவனின் குணச் சிறப்பைக் கூறுபவை. சில அவரது அருட்செயல்களைக் குறிக்கின்றன. அவற்றைக் கீர்த்தனம் செய்வது இறைவனின் அருளைப்பெற மிகச் சிறந்த வழியாகும். "கலௌ பக்தி:" என்ற வாக்கியத்தின்படி இறைவனிடத்தில் பக்தி செலுத்துவதுதான் சிறந்தது, அதிலும் பலர் ஒன்றுகூடி கூட்டுப் பிரார்த்தனை செய்வதின் மூலம் இறைவனின் அருளைப் பெறலாம். இடைவிடாது பக்தியுடன் செய்யப்பெறும் நாமசங்கீர்த்தனமே தியானம் வேள்வி, வழிபாடு என்ற மூன்று சிறந்த உபாயங்களின் சாதனமாகவும், அவற்றின் மாற்று உபாயமாகவும் ஆகின்றது என்பதை ஸஹஸ்ரநாம சுலோகங் களால் தெரிந்து கொள்ளலாம். ஆதிசங்கரர் வேள்வியைவிட நாம் சங்கீர்த்தனம் சிறந்த உபாயம் என்று ஸஹஸ்ரநாம பாஷ்ய முன்னுரையில் கூறுகின்றார். இறைவனின் நாமாவை எந்த வேளையிலும் சொல்லலாம். தகுந்த வேளை, தகாதவேளை என்ற நியதி இல்லை. தூய்மை இல்லாதவனும் தூய்மை யுள்ளவனும் எந்நிலையில் இருப்பவனும் திருமாலை நினைத்தவுடன் உள்ளும் புறமும் தூய்மை பெற்றுவிடுகிறான். இறைவனை நினைக்கும் வேளையே