பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பம் பயிலும் திறந்த வெளிகள், இலவம் வெடிக்க எழுந்த பஞ்சுபோல் கூட்டமாய்ப் புறவு குடிசெய்கோபுரம், ஆட்டம் பயிலும் அணிநகர் மாடம், சந்தை கூடும் மந்தை வெளிகள், குந்தி ஊர்நலம் கூடிப் பேசும் செந்தமிழ் மண்டபம், செய்தொழில் பயிலும் சந்துகள், படைக்கலம் தருநர் உலேகள், ! இன்னே ரன்ன இயல்புகள் பெற்று முன்னர் வாழ்ந்த மூதூர் அதுவாம்! இன்ருே பகைவர் இயல்புகள் பெற்று, நன்றும் தீதும் அறியாது நலிந்து, மக்க ளாட்சி மாறி, வேற்ருர் குக்கலுக் கடங்கும் கொடுமை கண்டே சீறி எழுந்தனர் திண்தோள் காளேயர் ! ஆறு மிகுந்தால் அனோன் செய்யும்? ஒளிமிகின் மறிக்க உயிர்களால் ஆமோ? வளிமிகின் தடுக்க மக்களால் ஆமோ? காட்டில், மலையில், கல்லிடைக் குகையில், மேட்டில், வெளியில் விரவித் தனித்தனிக் கூட்ட மாகக் கொள்கை பரப்பி, * நாட்டை விட்டு நட`எனக் கூறி, மாற்ருர் படையை மறைவில் அழித்தும், ஆற்றை உடைத்தும், அகழியைத் துர்த்தும் அல்லும் பகலும் எல்லே இலாத . தொல்லே தந்தனர் விடுதலைத் தோழர்கள்! அடக்கி ஆண்ட ஆசை குறையுமோ! . மடக்கிப் பிடித்தும், மண்டையை உடைத்தும், 43