பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தப் பரண்மேல் ஐம்பது பேரும் எலிகாத் திருக்கும் பூனேயைப் போல ஒளியற்(று) ஒடுங்கி ஒளிந்தே இருங்கள். புரட்சிக் காரர்கள் மறைவிடம் புகுந்ததும் உரைப்பேன்; ஊளேக் குரலால் உரைப்பேன். அதுவரை நீங்கள் எதுவந் தாலும் பதுங்கிய முயல்போல் பரண்மிசை இருங்கள்’ என்றனள்! வந்தோர் பரண்மேல் ஏறினர் ! முன்றில் வந்தாள் ; முன்பின் பார்த்தாள்; தெருக்கத விழுத்து வெளியிற் பூட்டி உருக்கமாய் அடுப்பில் உலையை ஏற்றினுள் ! கோட்டான் குகைவிட்டெழுந்து பறந்தது! வீட்டைச் சுற்றி விர்விர்' என்றே காட்டுக் காற்றும் காதைப் பிய்த்தது! வீட்டுக் கூரையில் வெளிப்புற மெங்கும். ஒட்டமும் நடையுமாய் ஒடி ஒடி மூட்டினுள் சிறுமி மூட்டினுள் தீயை! எண்ணெய்க் கொப்யரை எரிவதைப் போல வண்ண மூங்கில் வாழ்விடம் எரியத் தானத் தலைவனும், ஏனைய வீரரும், கானம் அதிரக் கத்தித் தீய்ந்து சாவச் சாவத் தங்கச் சிறுமியும் கூவி மகிழ்ந்து குதித்தா டினளே! 47.