பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரத்துப் பூக்கள் வழியெலாம் சிந்திப் பாட்டை அழகைப் பன்மடங் குயர்த்தின ! வளைந்த வாய்க்கால் இருகரைச் சேமை இலைகள் விரித்த விசிறிபோல் இருந்தன ! செங்கண் கருவரால் செய்கால் உழக்கிப் பாய்மடை அடைக்கும் ! பசுந்தாள் தாமரை பூக்க வண்டுகள் புதுப்பாட் டிசைக்கும் ! வாய்க்கால் இறங்கி வயலெலாம் தாண்டி இருண்ட தோப்பில் இருவரும் நுழைந்தோம் ! செந்தமிழ்ப் பாட்டைச் செங்கண் குயில்கள் இணேந்தே இசைக்கக் கேட்டோம் இருவரும் ! பைம்புல் தரையில் பகலவன் பொன்னுெளி சிறுதுளை சிந்தும் மதகுநீர் போலப் பாய்ந்து பலப்பல வண்ணம் காட்ட, ‘அத்தான் என்றே அணைத்தாள் என்னே ! உதடும் உதடும் கலந்துற வாடின ! "தன்னேப் பெற்ற தந்தைதாய் இடத்தில் என்னைப் பற்றி எடுத்து விளக்கி இருமனம் ஒத்த திருமணம் செய்ய வழிசெய் வேன்"என மங்கை மொழிந்தாள்! இருவரும் அவரவர் இல்லம் பிரிந்தோம் ! இரண்டொரு கிழமை இன்பமாய்க் கழிந்தது! அவளைப் பெற்ற அன்னையும் தந்தையும் என்னைப் பார்க்க இசைவதாய்ச் சொல்லி வீட்டிற் கென்னேக் கூட்டிச் சென்ருள் ! விருந்தெதிர் கொள்ளும் பெருஞ்சுவர்க் கூடம் இருந்தேன் கூடத் தெதிர்ப்புறச் சுவரில் இயற்கைக் காட்சிப் படங்கள் இருந்தன ! மூக்கும் விழியும் முறுக்கு மீசையும் 52