பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தீர்த்த யாத்திரை அறநிலை வணிகன் , அழகன்; திரண்ட மறத்தோ ளாளன்; வாய்மையின் இருப்பு; வருவோர்க் கெல்லாம் வழங்கும்.வள்ளல் அருங்குணத் தோன்றல்; அயலார் முகத்தில் வாட்டங் கண்டால் வாட்ட மடைவோன் ; கேட்டதை நல்கும் பெருநிதிக் கிழவன்; நூல்பல கற்ருேன் ; நுழைபுல முடையோன்; வேலே இல்லா வேளையி லெல்லாம் தமிழுரை கேட்கும் தன்மையன்; தமிழில் மிகுசுவை யுடையோன் ; வெல்லப் பேச்சினன்; பலர்சொற் கேட்பதும், பழமைப் பிடிப்பும் சிலரின் சேர்க்கையாற் சிக்கெனப் பிடித்தோன் ! பூத்த தாமரைப் பொய்கை; இடையிடைப் பூத்தசெவ் வல்லியின் புத்திதழ் அவளிதழ்; வட்டத் தாமரை மலர்போல் இளமை சொட்டும் முகத்தினள்: கொடியிடை : பூக்காத் தாமரை மார்பினள்; தாமரை நோக்கினள்; காமர் விழியாள் ; தாமரை மொய்க்கும் வண்டெலாம் அவள்விழி கண்டறியாத முண்டகம் என்றே மொய்த்தே மாறும்; J