உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துன்பச் சுழல்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுமை குலத்தத 117

விரைந்து வந்து விடுவதாகவும் சொல்லித் தலைமை போலீஸ் அதிகாரி சென்ருர், செல்வநாதரோ ஒன்றும் தோன்ருதவ ராய்த் தன் காரில் ஏறிக்கொண்டு கார் ஒட்டியை ஒட்டச் சொன்னர். எங்கு என்று அவன் பலமுறை கேட்ட பிறகுதான், அவர் பிரம்பூருக்கு என்று மெதுவாகப் பதில் இறுத்தார். 赛、

மார்த்தாண்டனைத் துரத்திச் சென்ற போலீஸ்காரர்கள் அவனே விடவில்லை. தெருவுதொறும் இன்னும் பலர் அவனேத் தொடர்ந்து துரத்தினர். அவன் உடலில் பட்ட இரத்தக்கறை அவன் ஏதோ கொல செய்துதான் ஓடி வரு கிருன் என்பதை நன்கு விளக்கிற்று. திருவொற்றியூர்த் தெருவுதோறும் ஓடினன். கொலையாளி கொலையாளி என்ற குரல் அதிகமாயிற்று. போலீசும் நெருங்கி வந்து கொண் டிருந்தது. அருகிலே உள்ள கோயிலுக்குள் நுழைந்தான். ஒருவேளை ஆண்டவன் தன்னே ஆட்கொள்வான் என்ற எண்ணம் போலும் ஆனல் உள்ளே இருந்தவர்கள் வெளி ஆரவாரம் கேட்டு மடக்க வந்தார்கள். இருபுறமும் ஆட்கள் வந்து கூடவே அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. நேரே கோபுரத்திற்கு மேலே, கோபுர உள்வாயிலில் புகுந்து ஏறத் தொடங்கினன். ஒவ்வொரு கிலேயாக ஏறி உச்சிக்குச் சென்றுவிட்டான். மற்றவர்கள் யாரும் வரமாட் டார்கள் என்ற எண்ணமோ ஏதோ தெரியவில்லை. கீழே குனிந்து பார்த்தான். போலீஸ் ஏறிவருவது தெரிந்தது. எப்படித் தப்புவது என்பதே தெரியவில்லை. அவர்கள் கையில் அகப்பட்டு மானமிழந்து உயிர் வாழ்வதா என எண்ணி ன்ை. எத்தனையோ செல்வர்களோடு, சீமான்களோடு, அதி காரிகளோடு அமர்ந்து கைகுலுக்கிய அந்தக் கைக்கு விலங்கா என்று நினைத்தான். ஒன்றும் செய்ய வழியில்லையே என உணர்ந்தான். சுற்று முற்றும் பார்த்தான். நாற்புறமும் மக்கள் கூடிவிட்டனர். தூரத்தே வளர்ந்த ஒரு மரத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/118&oldid=580171" இலிருந்து மீள்விக்கப்பட்டது