பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை

டாக்டர் கே. கே. பிள்ளை, டி. லிட்., டி. பிஃல் (ஆக்ஸ் போர்டு) சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் எழுதியது.)

திரு. மயிலை. சீனி வேங்கடசாமி அவர்கள் தமிழ் இலக்கியம், வரலாறு ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகள் செய்து நூல்களை வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் எழுதிய சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும் மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன், மூன்றாம் நந்தி வர்மன் என்ற நூல்களை நான் படித்திருக்கிறேன். இவை எளிய நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. மேலும் இவ்வாசிரியர் தகுந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே தம்முடைய கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்; எதையும் மிகைப்படுத்திக் கூறவில்லை. நமது நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் இவ்வாறு ஆதாரங்களைச் சீர்தூக்கிப் பார்த்து விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலைமையோடு கருத்துக்களை வெளியிடுவது மிகமிகத் தேவையாகும்.

"துளுநாட்டு வரலாறு" என்னும் இப்புத்தகத்தில் இவ்வாசிரியர் சங்க நூல்களில் துளு நாட்டைப் பற்றியுள்ள குறிப்புகளைத் தொகுத்து அந்த நாட்டின் பண்டைய வரலாற்றை உருவாக்க முயன்றிருக்கிறார். துளு நாடு தமிழகத்தின் ஒரு பகுதியாக அக்காலத்தில் இருந்தது. அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, குறுந்தொகை, சிலப்பதிகாரம் போன்ற பல சங்க காலத்து நூல்களை ஆராய்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அக்காலத்துத் துளு நாட்டின் எல்லைகள், ஆறுகள், மலைகள், நகரங்கள் முதலியவற்றையும் நன்-