உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

—11—

னமும் அவனுக்கு உடன் தோன்றியது. இவவெண் ணத்தின் முடிவு ஒளவை மூதாட்டியாரையே தூதுவ ராக அனுப்புவது என்பதாயிற்று. வேறுஎவரை அனுப் பினும் போருக்கு எழவே முடிவு ஏற்படும். ஆனால், ஒளவையாரை அனுப்பினால், அப்படி ஒன்றும் ஏற் படாமல் எல்லாம் இனிது முடியும் என்ற கோக்கங் கொண்டே ஒளவையாரையே துரது செல்லத் தீர் மானித்தான். அத் தீர்மானப்படியே ஒளவையாரும் தொண்டைமான் இளந்திரையனிடம் தூது போயினர். தொண்டைமான் இளந்திரையன் ஒளவை மூதாட்டி யாரைக் கண்டதும், இன்முகம் காட்டித் இன்னுரை கூறி நல்வர வேற்றுச் சிறந்த ஆசனத்தில் அமரச் செய்து வணங்கித் தன் இருக்கையில் அமர்ந்தனன்.

ஒளவையாரும் தொண்டைமானும் சிறிது நேரம் பல விடயங்களைப்பற்றி உரையாடினர். ஒவை யாரும் தாம் இன்னதன் பொருட்டு வந்ததாக ஒன்றும் தொண்டைமானுக்கு உணர்த்திலர். அவனும் அவ் வம் மையாரை, ' எங்கு? எதன் பொருட்டு வந்தீர்?" என்று வினவவும் இல்லை. ஒளவையார் புலலர் சிகாமணியார், ஆதலால், அவர் பல்வேறு இடங்கட்குச் செல்லும் பான்மையர். அம்முறைப்படி தன்னிடம் வந்தவர், என்ற எண்ணத்தில் இளந்திரையன் இருந்தனன். என்ருலும், தன் படைவன்மை இவ்வளவு என்பதை ஒளவை மூதாட்டியார் அறியின், ஒருவேளை அதிகனக்