உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

பெற்று உயர்ந்த நிலைக்கு வந்தால்தான், இம்மாதிரியான அச்சம் மட்டும் சிக்கல்களும், பயங்காட்டும் நெருக்கடிகளும் தீர முடியும்! எனவே, உறுதி படைத்த நம்பிக்கையினாலும் வலிமையினாலும் இக்குறிக்கோளை மனிதகுலம் அடைந்தே தீரும். ஒரு சார்பாகப் படைக் குறைப்புக்கு வழி செய்வதைக் காட்டிலும், ஒருசார்பாக, அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்துவதுதான் எளிதான செய்லாகும்!”.

அண்ணன் காட்டிய வழி நடக்கும் நேருஜியின் (பேச்சில், காந்தியத்தின் அறநெறிப் பண்பும், பஞ்சசீலக் கொள்கையின் நேர்மை கொண்ட மனிதாபிமான உணர்வும் பின்னிப் பிணைந்து, அவ்விணைப்பின் விளை பலனாக, உயர்ந்த தத்துவ போதனைக் கருத்துக்கள் பல நிறைந்து விட்டிருக்கின்றன. அழிவிலிருந்து மனித குலத்தைக் காப்பாற்றும் பொது நலப் பண்புடன் நேருஜி பேசியுள்ள பேச்சுக்கள், அணு ஆயுத வல்லரசுச் - சக்திகளின் முழுக் கவனத்தையும் கவரவேண்டுமென்பதே இந்தியத் துணைக்கண்டத்தின் கவலையும் கடமையுமாகும்.

இவ்வகையில், எத்தகைய உடன்பாட்டிற்காகவும் காத்திருக்காமல், பாரதம் தன்னளவிலே, படைக்கலத் தவிர்ப்பினைக் செயற்படுத்துவதன் மூலம், உலக நாடுகளுக்கே முதல் வழிகாட்டியாகவும் அமைய வேண்டுமென்று டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் விரும்பிக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இந்த அணுகுண்டு உற்பத்திப் போட்டியைத் தடுக்காவிட்டால், ஏற்படக் கூடிய விளைவுகளையும் பிரசாத் அவர்கள் வெகு அழுத்தமான குரலில் எடுத்துரைத்திருக்கின்றார்:

அவையாவன: