பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

காலடி எடுத்து வைக்கும் துராசையே தோன்றிக்கூட இருக்காது!.....

“பாரதபூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர்;
இந்நினைவ கற்றாதீர்!...
பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்;
நீரதன் புதல்வர்
இந்நினைவ கற்றாதீர்! ..”

ஆஹா! தம் ஞானரதப் பயணத்தில் எத்துணை தீர்க்கதரிசனத்துடன் ஒவ்வொரு பாடலையும் முழங்கியிருக்கிறார் பாரதி!

வஞ்சகச் சீனனுக்கு மண்ணாசை பிடித்தவர்களின் கதை தெரியாது போலிருக்கிறது! நன்றி மறந்த நயவஞ்சகர்கள் இந்நேரம் நம் எல்லையை விட்டு மரியாதையாக ஓட்டம் பிடிக்காமல் இருந்திருந்தால், உலக அரங்கிலிருந்தே அவர்களது மானம் மரியாதையும் ஓட்டம் பிடிக்கவேண்டியதுதான் என்ற உண்மையை ராஜரீகமாக உய்த்துணர்ந்தோ என்னவோ, அவர்கள் இப்போதைக்கு ஒரு நாடகம் ஆடி, ‘வாபஸ்’ ஆகிவிட்டிருக்கிறார்கள்! இல்லாவிட்டால், அவர்கள் பாடு என்ன ஆகியிருக்கும், தெரியுமா?

மாரதர் கோடி வந்தாலும்-கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள்!

ஆம்; பாரத தேவியைப் பற்றி சீனர்கள் அறிய மாட்டார்கள்!

இந்தியாவுக்கு ஆயுதங்கள் - வழங்குவதில் பிரிட்டனும் அமெரிக்காவும் போட்டா போட்டியிடுகின்றன!