உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தங்களுக்காக உண்மையான சேவை செய்த தலைவர்கள் பார் என்பதை நிதானமாக ஆராய்ந்து, அதன் பின்னரே, தங்களுடைய மதிப்பு வாய்ந்த வாக்குகளை அளிப்பார்கள், பொதுமக்களின் தனிப்பட்ட கருத்துக்களின் பொதுப்படையான பிரதிபலிப்பாக அமையும் வெற்றி-தோல்விகளின் மதிப்பீட்டின் வாயிலாகவே தேர் தலின் முடிவுகள் நிர்ணயிக்கப்படும். இது பொதுத் தேர்தல் பற்றிய ஒரு கணிப்பு.

இந்த முறை நடைபெற்ற பொதுத்தேர்தல் இந்தியத் துணைக் கண்டத்தை மட்டும் கவரவில்லை; அமரிக்கா, ருஷ்யா, பிரிட்டன், போன்ற நாடுகளின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்தது. இதற்குக் காரணங்கள் பலவுண்டு, ஆளும் கட்சியின்பால் அழுக்காறு பூண்டு அதைக் கவிழ்க்கச் சதிசெய்யும் நோக்கத்துடன் பழைய தலைவர்கள் புதுவேஷங்கள் பூண்டு, புதிய கூட்டுக்கள் அமைத்துச் செயற்பட்டார்கள். இதன் விளைவாக, பொதுத்தேர்தலில் போட்டிகள் வலுப்பெறலாயின. பாரதப் பிரதமர் நேருஜி, பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணமேனன் ஆகியோருக்கு எதிரிடையாக லோகியாவும் ஆச்சாரியா கிருபளானியும் போட்டியிட்டார்கள். நேருஜியின் வெற்றி குறித்து நாற்பதுகோடி மக்களுக்கும் ஒரு நிரந்தரமான நல்ல நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு திரு மேனனின் நிலையைக் கணிக்க முடியாமல் இருந்தது. முற்போக்குச் சக்திக்கும் பிற்போக்குச் சக்திக்கும் நடை பெற்ற போராட்டமாக அமைந்த இப்போட்டியில், வடக்குப் பம்பாய் மக்களின் வாக்குப்பாதுகாப்பினால், நம் பாதுகாப்பு மந்திரி மாபெரும் வெற்றிபெற்றுவிட்டார்.

நம் அருமைத் தமிழ்நாட்டிலும் சில தொகுதிகளில் இதே போட்டி நிலை நிலவியது. காந்திஜி போதித்த புறத்தூய்மையைப் போல அகத்தூய்மையையும் பெற்றி லங்கும் தமிழகத்தின் முதல்மைச்சர் திரு காமராஜ்