உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இக் கட்டுரைத் தொகுப்பு நூல் உலக வியவகாரச் சூழல்களின் பின்னணியில் அமைந்துவிட்டிருப்பதுடன், தேசிய ஒருமைப் பாட்டுச் சக்தியின் வலியுறுத்தலுக்கும் ஆதாரம் தந்திருக்கிறது.

‘பூவை’யின் நூல்கள் பலவற்றை இதுவறை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். எங்கள் வெளியீடான “பூவையின் கதைகள்” என்ற நூலுக்கு தமிழ்நாடு அரசினரின் பரிசு கிடைத்திருக்கிறது. அவற்றிடை, இந் நூலின் தரம் தனித்து நிற்கும், இந் நூலினைத் தமிழ் ஆர்வலரும், நாட்டுப் பற்றுள்ளோரும் ஆர்வத்துடன் வரவேற்பார்கள். என்னும் உண்மையை நாங்கள் அறிவோம். ஆசிரியருக்கும் உங்களுக்கும் எங்களுடைய அன்பையும் நன்றியையும் தெரிவிக்கக் கிட்டிய இச்சிறு வாய்ப்பை நாங்கள் வாழ்த்துகின்றோம்.

கா . முத்து,
உரிமையாளர், அழகுப் பதிப்பகம்.