பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

குருதேவரைத் தவிர? ‘கீதாஞ்சலி’யின் அமரவாக்கு ஆயிற்றே!

தாகூர் பிறந்த இடம்: கல்கத்தா, நாள் : 1861, மே 7. மஹரிஷி தேவேந்திர நாத் தாகூருக்கு அவர் பதினான்காவது பிள்ளை ; கடைக் குட்டி.

கவிஞர் பிரான் சொல்லுகின்றார், “குழந்தைப்பருவம்! ஆஹா! வாழ்க்கையின் விடியற்காலம் அல்லவா அது!” என்று

நிதிமிகுந்த செல்வக் குடும்பத்தில் பிறந்த ரவீந்திரருக்கு வீட்டை விட்டு வெளியுலகைக் காண நேர்ந்த அந்த வாய்ப்பே அவரது இலக்கிய வாழ்க்கையின் மகிழ்வுக்குரிய மூலைத்திருப்பம் ஆகும், ‘இளமை நினைவுகள்’ என்ற நூலில் தம்முடைய இளம் பிராயத்துக் கற்பனைகள் குறித்துப் பேசும் பொழுது, இவ்வாறு குறித்துள்ளார்.

தாகூரின் மூத்த சகோதரரான சோமேந்திராவும் அவரது சகோதரி மகனான ஸத்யாவும் அவரை தனியே விட்டுவிட்டுப் பள்ளி சென்று, பிறகு திரும்பும் பொழுது, அங்கு நடந்த அனுபவங்களைப் பற்றிச் சொல்லுவார்கள், தாகூருக்கு தானும் பள்ளி செல்ல வேண்டுமென்ற துடிப்பு மிஞ்சிக் கொண்டே போகுமாம். இதை உணர்ந்த போதனாசிரியர் ஒருநாள் அவரைப் பார்ந்து, “நீ இப்போது பள்ளிக்கூடம் போக வேண்டுமென்றுதான் துடிப்பாய்; ஆனால் பின்னர் ஒரு நாளில், இந்தப்பள்ளி எனும் சிறை யிலிருந்து விடுபட்டால்போதும் என்று நீயே துடிப்பாய்!” என்றார்.

ஆசிரியரின் இந்த முன்னோக்குச் சொற்கள் அப்படியே மெய்யாய் விட்டன அல்லவா? பள்ளிச் கூடத்தை ஏறக்குறைய சிறை போலாக்கி விட்டிருக்கும்