உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழும் தமிழே, வாழி

பிறர் நலனுக்கெனத் தன்னைத் தானே தியாகம் செய்து கொள்ளும் பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு வெற்றி காணும் போதுதான், மனிதன் பிறவிப் பயன் அடைகின்றான். அப்படி யென்றால், திரு. ம. பொ. சி அவர்கள் ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு முன்னரே பிறவிப் பயனை எய்தி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும், ஆம், அவர் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்.

“ஒழுக்கம், அறிவு, ஆற்றல், ஆண்மை, தியாக உணர்வு ஆகிய குண நலன்கள் அனைத்தும் ஒருங்கு பெற்றவரே தலைமை பதவிக்குப் பூரண தகுதியுடையவராவார். இத்தனை தகுதிகளையும் பெற்ற ஒரு தலைவரை நாம் நினைத்த மாத்திரத்தில் சிருஷ்டித்துவிட முடியாது. பல தலை முறைகளுக்கு ஒரு முறைதான் அத்தகைய தலைவர்கள் தோன்றுகின்றனர். கால சக்திதான் அவர்களை நமக்குத் தருகின்றது.”

தலைமைப் பதவிக்கு திரு. ம. பொ, சி. எல்லைகட்டும் பண்புகள் இவை, இத்தகைய லட்சியங்கள் ஒவ்வொன்றிலும் அவரை இன்றைத் தமிழகம் தரிசிக்கின்றது. நாம் பாக்கியம் செய்தவர்கள் - செயற்கரிய சாதனைகள் செய்த தலைவர் பெறற் கரிய பெருவாய்ப்பாக நம் தலைமுறைக்குக் கிடைத்திருக்கின்றார். கால சக்திக்கு நம்முடைய பணிவு மிக்க வணக்கமும், நன்றியும் உரியது.

“சிவம் - அன்பு; ஞானம் - வீரம். இப்பொழுது நாட்டிற்கு அன்பு வீரம் தேவை. அன்புள்ள இடத்தில்