உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 தென்மொழி



டிக் கடல், இந்தியக் கடல் ஆகிய மூன்றின் பகுதியாக இக்கடல் அமைந்திருப்பதால் இதற்குக் கரைகளே இல்லை. இக்கடல் நடுவில் உள்ளது அண்டார்க்டிக் பெருநிலம். வெடம் கடலும், இராசு கடலும் இதன் தலையாய துணைக் கடல்களாகும். இது 80 இலக்கம் கடற்பெருக்கம் உடையது. ஆர்க்டிக் கடலைவிட இது மிகம் குளிர்ந்தது. ஆழமானது. இதன் மேற்பரப்பு வெப்பநிலை 40 பாகையாகும். அடிக்கடி இது 28 பாகையாகக் குளிரும். இக்கடலின் பெரும் பகுதி பனிக்கட்டிகளால் சூழ்ந்திருக்கும். மழைக் காலத்தில் முழுக் கடலின் மேற்பகுதியும் பனியாகவே காட்சிதரும். ஆர்க்டிக் கடலின் பனிப் பாறைகளை விட இதன் பனிக்கட்டிகள் பெரியவையாக இருக்கும். இதன் நீர் மிகுதியாக ஆவியாதல் இல்லையாதலான், இந்நீரின் உப்புத்தன்மை பிற கடல்களிலும் மிகக் குறைவு. இக்கடல் நீரின் அடர்த்தி அதிகம். இதன் ஆழமற்ற பகுதிகளில் கடற்பஞ்சு போன்ற முதுகு எழும்பில்லாத உயிர்கள் வாழ்கின்றன. கடற் பூண்டுகள் இதனுள் ஏராளமாக உண்டு. ஏராளமான அளவில் மீன்களும், நீர் யானை, நாய்கள் போன்ற விலங்குகளும் இதில் உண்டு. திமிங்கலங்கள் இக்கடலில் பெருமளவில் காணப்படுகின்றன. பிற கடல்களில் உள்ளன போன்று, கடலில் வாணிக வழிகள் இல்லை.


இக்கடலில் அமைத்த அண்டார்க்டிக் பெருநிலம் 55 இலக்கம் கற்பெருக்கங்கள் உடையது, ஒரே பனியும், பனிக்கட்டியுமாக நிறைந்திருப்பதால் இந்நிலப் பகுதியில் மக்கள் நடமாட்டமே இல்லை! இந்நிலப் பிரிவு கடல் ம்ட்டத்திற்குமேல் ஒரு கல் உயரமுள்ளது இதைச் சுற்றியுள்ள நீர்ப்பரப்பில் 2 இலக்கம் கற்பெருக்கத்திற்கு ஒரே பனிக்கட்டிகளே நிறைந்துள்ளன. அண்டார்க்டிக் நிலப்பிரிவு, ஆத்திரேலியாவைவிட இருமடங்கு பெரியது. இங்குள்ள மலைகள் 15,000 அடி வரை உயரமுள்ளனவாயும் பனி படர்தனவாகவும் உள்ளன ராசு பனித்திட்டு ஒன்று 1000 அடி பருமனுள்ள ஒரே பனிக்கட்டியால் ஆன திட்டாகும். பிரான்சை விட இத்திட்டு பெரியது. இத்திட்டு ஒரு நாளைக்கு ஐந்து அடி மேனி கடலை நோக்கி நகர்த்து கொண்டுள்ளது. இந்நிலத்தில் இரண்டு எரிமலைகளும் உண்டு. ஒரு மணிக்கு 200 கற்கள் விரைவில் வீசும் பெரிய புயல்களும், காந்தப் புயல்களும் இங்கு உண்டாகின்றன. கோடைக்காலம், மழைக்காலம் ஆகிய இரு காலங்கலே இங்குண்டு. இதில் உள்ள நிலையான பனிப்பாறைகள் உருகிக்கொண்டு வருதலால் இவ்வுலகு வெப்பம் அடைந்து கொண்டு வருவதாகக் கருதுகின்றனர். ஆண்டார்க்டிக் முனை உலகிலேயே மிகக் குளிர்ச்சியானதும், வெப்பத்தைப் பெறுகின்றதும் ஆன இடமாகும், இங்குள்ள மிகவும் குறைந்த வெப்ப அளவில் (-84.4oC, -126oF) எஃகுத் துண்டுகளைச் சுக்குநூறாக உடைகலாம்.