பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 தென்மொழி


தமிழ்த் தொண்டன்.


ம. இலெ. தங்கப்பா.


(கலிநிலைத் துறை)


உண்ணாமன்; உறங்கான், நல்லுடை பூணான்; உடல்துன்பம்
எண்ணான்; ஓயான்; இன்னுயிர் போலும் மனையாளை
நண்ணான்; தங்கான்; உள்ளுணர் வாழ்ந்தே திரிகின்றான்
பண்ணார் இன்பச் செந்தமிழ் எண்ணும் பணியோனே!

கற்றைக் குஞ்சி தோளை மறைப்பக் கருத்தாடி.
புற்றைப் போலும் சுற்றி அடர்ப்பப் பொருட்டெண்ணான்
பெற்ற அன்னே எந்தமிழ் சூழும் பகை நீக்கி
முற்றும் வாழ்வே மாப்பணி யாக்கொள் முனைவோனே!

தாயைப் பாரான்; தளிருடல் வற்றித் தளருத்தன்
சேயைப் பாரான்; மனைவினை பாரான்; உடல்போழும்
நோயைப் பாரான்; தாய்மொழி ஆட்சி அமைகாறும்
ஓயப் பாரான் நற்றமிழ் அன்பின் உரவோனே!

ஏசிப் பெற்றோர் உற்றவர் தூற்றும் இழிசொற்கும்
காசைச் சேர்ப்பீர் என்றழும் இல்லாள் விழிநீர்க்கும்
பேசற் கரிதாம் பீழையின் வறுமைப் பெருநோய்க்கும்
ஏசற் றேங்கான்; எந்தமிழ்த் தொண்டில் இணைவோனே!

கந்தல் உடைக்குள் மேனி ஒடுங்கும்; கலைகுஞ்சி
செந்தா ழைப்புன் வெஞ்சரு கொக்கும்; செழுங்கண்கள்
பொந்துள் வீழும்; புல்லிதழ் காயும்; புயல்நெஞ்சோ
வெந்து புழுங்கும்; தீத்தமிழ்க் கன்றி வெதும்பானே.

எல்லைத் தீய்த்தார்; இந்தி திணித்தார்; இனவூக்கம்
கொல்லத் கந்தோ இந்தியம் என்றார்; குருடாம்நம்
புல்லர் இசைந்தார்; செந்தமிழ் அன்பிற் புதைத்தானோ
வல்லன்; அஞ்சான் தில்லியர்க் கென்றும் வணங்கானே!

குன்றே போலும் வன்பொருள் கோடி குவிந்தாலும்
ஒன்றே னும்தன் தாய்மொழித் தொண்டுக் கிழுக்காயின்
துன்றான்; தீப்போல் கொல்நிரப் பேனும் உவந்தேற்பான்
மன்றார் தமிழுக் குரிமை மறுத்தால் மறல்வானே!

அப்பா என்றே தன்மக வோடி அணைத்தாலும்
தப்பா அன்பால் மார்பு முத்தம் தரலன்றிச்