பக்கம்:தெப்போ-76.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ -76 # 09 "ஆமாம்; இந்த நாயின் எஜமானர் ஒரு புரொபலர். அவர் 1925-ல் இறந்துவிட்டார். பாவம், இந்த நாய்க்கு அப்போது இரண்டரை வயதுகூட ஆகவில்லே?’ என்ருர் கோபால் ராவ். 'அது சரி; இந்த ஸ்டேஷனுக்கும் அந்த நாய்க்கும் என்ன சம்பந்தம்? இங்கே எதற்காக அதற்குச் சிலே செய்து வைத்திருக்கிரு.ர்கள்?’ என்று கேட்டார் அம்மாஞ்சி. 'அந்த புரொபஸர் தினமும் இந்த ஸ்டேஷனுக்கு வந்துதான் ரயில் ஏறுவது வழக்கம். தினமும் காலேயில் எட்டு மணிக்கு ரயில் ஏறி யூனிவர்ஸிடிக்குப் போவார். பிறகு மாலே ஐந்து மணிக்குத் திரும்பி வருவார். காலேயில் அவரோடு ஸ்டேஷனுக்கு வரும் அந்த நாய் மாலேயில் அவர் திரும்பி வரும் வரை இங்கேயே காத்துக் கிடக்கும். 'ஒரு நாள் யூனிவர்ஸிடிக்குப் போன புரொபஸர் திரும்பி வரவேயில்லே. இதய நோய் காரணமாக யூனிவர் விடியிலேயே இறந்து விட்டார். அவரை அங்கேயே அடக்கம் செய்து விட்டார்கள். அந்தச் செய்தியை நாய்க்குச் சொல்லுவார் ஒருவருமில்லே. எஜமானரைக் காணுத இந்த ஹச்சிகோ ஸ்டேஷனிலேயே வெகுநேரம் வரை பட்டினியோடு காத்துக் கொண்டிருந்தது. பிறகு மிகுந்த சோகத்தோடு வீட்டுக்குத் திரும்பிச் சென்றது. மறு நாள் வழக்கம்போல் காலே எட்டு மணிக்கு ஸ்டேஷ துக்கு வந்து மீண்டும் ஐந்து மணி வரை காத்திருந்து விட்டு வீட்டுக்குத் திரும்பிச் சென்றது. இப்படியே பத்து வருட காலம் அது உயிரோடு உள்ள வரை வந்து போய்க் கொண்டிருந்தது. எஜமானரைப் பிரிந்த சோகம் தான் அதன் முகத்தில் தெரிகிறது. அதற்குத்தான் இங்கே சிலே வைத்திருக்கிருர்கள்?’ என்ருர் கோபால் ராவ். 'அடாடா, இப்படி ஒரு தேசமா?’ என்று வியந்தார் சாம்பசிவ சாஸ்திரிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/110&oldid=924611" இலிருந்து மீள்விக்கப்பட்டது