பக்கம்:தெப்போ-76.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 30 தெப்போ - 76 உரை முடியும்வரை எல்லாமே நிகழ்ச்சி நிரலில் கண்டபடி டக் டக்கென்று குறித்த நேரத்தில் நடந்து முடிந்தன. சிவப்பு வட்டச் சூரியன் (ஹி-னே மாரு) உருவத்தைச் சின்னமாகக் கொண்ட தேசியக் கொடியை ஏற்றி வைத்த சக்கரவர்த்தி ஹிராஹிடோ அவர்கள் சுருக்கமாக இரண் டொரு வார்த்தைகளே பேசினர்: 'இந்தத் தொப்போ-76-விழாவை டோக்கியோவில் ஏற்பாடு செய்தவர்களேப் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டின் கலேப்பொக்கிஷமாகத் திகழும் திருவாரூர்த் தேரையும், தமிழ்மறை என்று போற்றப்படும் திருக்குறளே இயற்றிய வள்ளுவரின் சிலேயையும் இங்கேயே செய்து இங்கேயே விழாவும் நடத்திக் காட்ட வந்துள்ள உங்கள் அனேவருக் கும் என் வாழ்த்துக்கள். 'சிவப்பு வட்டச் சூரியன் சின்னம் இந்த நாட்டின் மிகப் பழமையான சின்னம் என்பதை நீங்கள் அறிவீர்கள் . கீழ்த்திசை நாடுகளின் கீழ்க்கோடியிலுள்ள ஜப்பான் நாட் டில் உதிக்கும் சூரியன் தான் உங்கள் தேசத்துக்கு வரு கிருன். ஆகவே உங்களோடு உறவுக்கு வருவது, அதாவது சூரியன் மூலமாக உறவுக்குக் கைகொடுப்பது நாங்கள் தான். பதின் மூன்ரும் நூற்ருண்டிலிருந்து இந்த நாட்டின் சின்னமாகத் திகழ்ந்துவரும் சிவப்பு வட்டச் சூரியன் உருவத்தைத் தேசியக் கொடியில் பதித்து அதிகார பூர்வ மாகப் பறக்கவிட்டது 1870-ல்தான். பின்னர் 1872-ல் அதையே தேசியக் கொடியாக்கி ஜப்பானில் முதல் முதலாக ரயில் ஒடத் தொடங்கியபோது, அதாவது முதல் ரயிலோட்டத்தின்போது பறக்க விட்ட பெருமை மெய்ஜி சக்கரவர்த்தியைச் சேர்ந்தது. முதலில் ரயிலோட்டத்தில் பறக்க விடப்பட்ட எங்கள் கொடியை ஏறத்தாழ நூருண்டுகளுக்குப் பிறகு இன்று இங்கே தேரோட்டத்தில் பறக்க விடுகிருேம். இந்தப் பெருமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/130&oldid=924633" இலிருந்து மீள்விக்கப்பட்டது