பக்கம்:தெப்போ-76.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தெப்போ -76 என்ன அழைத்தவுடன் ஒத்துக்கொண்டதற்குக் காரணம், இது ஒரு கற்பனைத் தேர் என்பதுதான்! நண்பர் சாவி அவர்களின் எழுத்தின் வாயிலாக நான் ஜப்பான் நாட் டைக் கற்பனையில் காணுகிறேன். இந்த நாட்டில் உள்ள ஒரு நன்றியுள்ள நாயின் சிலே பற்றி அவர் தீட்டியுள்ள உருக்கமான வாசகங்கள் என் உள்ளத்தைத் தொட்டன. தமிழ்நாட்டில் உள்ள சில மனிதர்கள் நினேவில் வைத்துக் கொள்ள வேண்டிய நாயாகும் அது! வாஷிங்டனில் திருமணத்தை மிகச் சிறப்பாக நடத்தி முடித்த குழுவினர், ஜப்பானில் தேர் இழுக்கும் விழாவை -யும் சீர்பெற நடத்திடுவர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தேர்' என்பது தேர்ந்தெடு என்ற பொருளிலும் :பயன்படுத்தப்படும் சொல்லாகும். தேர்” ஒட்டிட ஜப்பானத் தேர்ந்தெடுத்துள்ளனர். தேரை இழுத்தால் மட்டும் போதாது பின்னுலிருந்து உலுக்கு மரம்-போட்டுத். தள்ளவும் வேண்டும் தேர் தள்ளுதல் என்றும் கூறுவ gエすróみ汁玄赤@”aróruエTホーró高エ வந்தது என்று யாராவது வேடிக்கையாகச் சொன்னுல் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல! தேருக்கும் முட்டுக் கட்டை உண்டு! தேர்தலுக்கும் முட்டுக்கட்டை உண்டு! என்ன பொருத்தம் பாருங்கள். தேருக்குப் போடும் முட்டுக் கட்டை அதை ஒழுங்காக ஓடவிட! ஆனல் தேர்தலுக்குப் போடும் முட்டுக்கட்டை? இதை நான் கேள்வியாகவே விட்டு விடுகிறேன். - தமிழ்நாட்டில் பூம்புகாரையும், வள்ளுவர் கோட்டத் தையும் உருவாக்குவதில் ஒத்துழைத்துக் கலைப்பணி புரிந்த சிற்பிகள் ஜப்பானில் தங்கி, தேருக்கான வேலைகளையும் .திருவள்ளுவர் சிலே உருவாக்கும் தொண்டினையும் நிறை வேற்றியிருப்பது சாவி அவர்கள் திறமையினலேதான் என்று கூறினல் மிகையாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/132&oldid=924635" இலிருந்து மீள்விக்கப்பட்டது