பக்கம்:தெப்போ-76.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 13. 'பலே, பலே! ரொம்பத் தமாஷாத்தான் இருக்கும். வாட்சுக்குப் பெயர் போன ஜப்பான் நாட்டிலே மிட்டாய் வாட்சா? ரொம்ப வேடிக்கைதான். ! ?? - 'இது மட்டும்தான? இன்னும் எத்தனையோ தமா ஷெல்லாம் இருக்கே...???

  • சரி; தேர் என்ருல் அதை யார் செய்து கொடுப் பாங்க? யார் ஒட்டுவாங்க???

'திருவாரூர் வி. எஸ். டி. கிட்டே இதைப் பற்றியெல் லாம் ஏற்கெனவே விவரமாப் பேசிட்டேன். தேர் விடற திலே அவர் ஒரு எக்ஸ்பர்ட்டாச்சே! ஓடாத தேரை ஒட வைத்தவராச்சே! இந்தத் தேரைச் செய்து கொடுக்கிற பொறுப்பு அவருடையது. அப்புறம் என்ன கவலே? அவர் தான் நமக்கெல்லாம் லீடர்...?? . . கோபால் ராவ்! பெரிய ஆளய்யா நீர்! எல்லா ஏற் பாடுகளேயும் செய்து வைத்துவிட்டுத்தான் என்னிடம் வந் தீரா? ரொம்ப சரி. தேரை யார் இழுப்பாங்க?" 'ஒரு வடத்தை ஜப்பான்காரங்க இழுக்கட்டும். நாம், இன்ைெரு வடத்தை இழுப்போம். கலாசார உறவுக்கு இது நல்ல வழி. இதுதான் ரியல் கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்ச்: ' என்ருர் கோபால் ராவ்.

  • நாம் என்ருல் எத்தனே பேர்???

ஆயிரம் பேர்.: போதுமா அவ்வளவு பேர்???

  • கூடத்தான் நாலேந்து யானைகளைக் கொண்டுபோகப் போகிருேமே!- -

யானைகளா? அதுங்க. எதுக்கு?’’ பின் பக்கத்திலிருந்து தேரைத் தள்ளி விடுவதற்கு. பாலக்காட்டிலே தேர் தள்ளுவதற்கென்றே யானைகளைப் பழக்கி வைத் திருக்காங்க. கல்பாத்தி தேர் பார்த்திருக்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/14&oldid=924643" இலிருந்து மீள்விக்கப்பட்டது