பக்கம்:தெப்போ-76.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 42 தெப்போ - 76 வயிற்றில் பாயசம் போனதும் எல்லாருக்கும் உண்ட மயக்கம் வந்துவிட்டது. வடம் பிடித்து இழுத்த தொண் டர்களேயும் அது விடவில்லை. சற்று நேரம் களேப்பாற விரும்பிஞர்கள் அவர்கள். .

  • அதெல்லாம் கூடாது. உடனே மீண்டும் தேர் இழுக்கப் போக வேண்டியதுதான் என்று அவர்களு டைய தூக்கத்துக்கு முட்டுக்கட்டை போட்டார்கள் சில முட்டுக்கட்டைத் தொண்டர்கள்!

"அப்படி இப்படி என்று தேரை த் தெரு முனக்குக் கொண்டு சேர்க்க மணி நாலாகிவிட்டது. 'தேரோட்டத்தின் முக்கியக் கட்டமே இனிமேல் தான்!?? என் ருர் அம்மாஞ்சி வாத்தியார், முதலில் தேர் வடங்களே அடுத்த தெருவுக்குள் தூக்கிக் கொண்டு போய்ப் போட்டார்கள் . அடுத்தாற்போல் சக்கரங்களுக்குக் கீழே வலிமைமிக்க ஸ்டீல் தகடுகளே வைத்து அவற்றின் மீது விளக்கெண்ணெய் டின்களே உடைத்து ஊற்றினுர்கள். வழ வழப்பான அந்தத் தகடுகளின் மீது தேர்ச் சக்கரங்கள் வழுக்கிக் கொண்டு திரும்பப் போகும் காட்சியைக் காணப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண் கொட்டாமல் காத் திருந்தார்கள். தெருமுனையில் உள்ள உயரமான ஒரு கட்ட டத்தின் மொட்டை மாடி மீது போய் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர் சக்கர வர்த்தியும் அவரது குடும் பத்தினரும். தொம்பைகள் காற்றிலே ஊசலாட, யானேகள் பின் பக்கம் முட்டித் தள்ள, தேர் ஜம்மென்று அடுத்த தெருவில் திரும்பியபோது அதிர் வேட்டுகளும், தாரை தப்பட்டை களும் எழுப்பிய ஒலி ஆகாசத்தை முட்டி மோதின. அதே சமயம் உயரத்தில் பறந்து வந்த ஹெலிகாப்டர் விமானம் கின் சாவில் வட்டமடித்துத் தாழ்வாகப் பறந்து ரோஜா, சாமந்தி, மல்லிகை மலர்களே க் கூடை கூடையாகக் கொட்டி தேர் மீது மாரியாகப் பொழிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/142&oldid=924646" இலிருந்து மீள்விக்கப்பட்டது