பக்கம்:தெப்போ-76.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 置g5 காஞ்சிபுரம் தண்டமாலே, மதுரை மல்லிகை மா:ே , வெள்ளே , பச்சை, ஆரஞ்சு ஆகிய வண்ணங்களில் கட்டப் பட்ட திருச் செந்தூர் மாலே மூன்றையும் விநாயகரின் கழுத்தில் சாற்றி அலங்காரம் செய்தார் ஜப்பான் சாஸ்திரி. இரவு எட்டு மணிக்கு, குறித்த நேரத்தில், அதிர் வேட்டுகளும் அவுட் வாணங்களும் போட்டு தெப்பம் புறப் படப் போவதை அறிவித்தார்கள். தெப்பத்தின் வண்ணச் சரவிளக்குகள் தண்ணிரில் பிரதிபலித்தபோது ஹகோனே ஏரிக்குள் ஏதோ மாயா ஜாலம் நிகழ்வது பே விருந்தது. காற்றில் அணையாத காகிதக் கூண்டு விளக்குகளே, ஆயிரக்கணக்கில் மிதக்க விட்டனர் ஜப்பானியப் பெண் மணிகள். - சக்கரவர்த்தி வந்து தம் ஆசனத்தில் அமர்ந்ததும் வி. எஸ். டி. தெப்பத்தைக் கரையோடு சேர்த்துக் கட்டி யிருந்த கயிறுகளே அவிழ்த்து விடச் சொன்ஞர். புதை வாணங்கள் போன்ற வெடிகளேத் தண்ணிரி லேயே கொளுத்திவிட்டனர் ஜப்பானியர். நாதஸ்வர இசையுடன் மெதுவாக நகரத் தொடங் கியது தெப்பம். ஒவ்வொரு கச்சேரிக்கும் இரண்டு மணி நேரமே ஒதுக்கி யிருந்தார்கள். 'அடாடா! இந்த சந்தன வாசண்யும், ஊதுவத்தி மனமும், நாதஸ்வர இசையும் கலந்து காற்றிலே வீசுகிற போது கந்தர்வ லோகமே கீழே இறங்கி வந்துவிட்ட மாதிரி இருக்கு?’ என் ருர் ஜப்பான் சாஸ்திரி. காலேயில் தெப்ப விழா முடிந்ததும், எல்லோரையும் கும்பலாக நிறுத்தி வைத்து வெள்ளேப் பூசனிக்காய் மீது கற்பூசத்தைக் கொளுத்தி திருஷ்டி சுற்றிப் போட்டார் கோபால் ராவ். . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/155&oldid=924660" இலிருந்து மீள்விக்கப்பட்டது