பக்கம்:தெப்போ-76.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 78 157 'எங்கள் தாய் நாட்டுக்கு அடுத்தபடி நாங்கள் விரும்பிப் போற்றுவது உங்களுடைய ஜப்பான் நாட்டைத் தான். உங்களுடைய சுறுசுறுப்பு, அழகுணர்ச்சி, நன்றி உணர்வு, சிரித்த முகம், விருந்தோம்பும் பண்பு , கலேயார் வம் இவ்வளவும் எங்களே ப் பிரமிக்க வைக்கின்றன?? என்ருர் கோபால் ராவ். தெப்போவுக்காக இங்கே வந்து உதவி புரிந்தவர்கள் அவ்வளவு பேருக்கும் எங்கள் நாட்டின் பழமையான கபூகி நாடகம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளேன். கபூகிஸ்ா தியேட்டரில் ஒரே சமயத்தில் 2222 பேர் உட்காரலாம். இன்றிரவு அதைப் பார்த்துவிட்டு நாளே பகல் எல் லோரும் என்னேடு விருந்துண்ட பிறகே நீங்கள் இந்தியா வுக்குத் திரும்ப வேண்டும்’ என்ருர் சக்கரவர்த்தி. சாஸ்திரிகள் வந்ததும் அவர்களுக்கும் சொல்லிவிடுங் கள்?’ என்ருர் மகாராணி. - மறு நாள் விருந்துக்குப் பின்னர் ஒவ்வொருவர்ாக வந்து சக்கரவர்த்தியிடம் விடை பெற்றுக் கொள்ளத் தொடங்கினர். சக்கரவர்த்தி ஒவ்வொருவராக அழைத்துக் -கை குலுக்கி நன்றி சொல்லிக் கொண்டிருந்தார். முதலில் வடம் பிடித்து இழுத்த ஆயிரம் பேருக்கும் ஆளுக்கொரு வாட்சும், டிரான்ஸிஸ்டரும் அன்பளிப்பாகக் கொடுத்தனுப்பினர் சக்கரவர்த்தி. அடுத்தபடியாக வந்த சங்கீத வித்வான்களுக்கு ஆளுக் கொரு டேப் ரிகார்டர், டிரான்ஸிஸ்டர், வாட்ச், முத்து :மாலே நான்கும் பரிசாகக் கொடுத்தார். நாமகிரிப் பேட்டைக்கும் வலயப்பட்டிக்கும் மட்டும் எல்லாமே டபிள் டபிள்! - 'நீங்கள் இருவரும் தேர், தெப்பம் இரண்டிலும் வாசித் தீர்கள். அதல்ை எல்லாமே டபிள்?’ என்ருர் சக்கரவர்த்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/157&oldid=924662" இலிருந்து மீள்விக்கப்பட்டது