பக்கம்:தெப்போ-76.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 f 9. ஹரிஹர சாஸ்திரிகள். பாஸ்போர்ட்டுலே அந்தப் பெயரைத்தான் எழுதணும். வாங்க, இப்பவே அவரைப் போய்ப் பார்த்துடலாம்...?? ஜப்பான் சாஸ்திரி ஊஞ்சலில் உட்கார்ந்து விசிறிக் கொண்டிருந்தார். இவர்களேக் கண்டதும், வாங்கோ, வாங்கோ! எங்கே இப்படி இந்த வெய்யில்லே??? என்று விசாரித்தார். 'உம்மைப் பார்க்கத்தான். அடுத்த வாரம் ஜப்பா னுக்குப் போகிருேம். நீரும் வருகிறீரா?? என்று கேட் டார் அம்மாஞ்சி, ஜப்பானுக்கா? என் மருமானுக்குக்கூட டோக்கியோ விலேதான் உத்தியோகம், அங்கே போனல் சாப்பாட் டுக்குக் கவலேயில்லே, ஆமாம், ஜப்பானில் என்ன விசே ஷம்??? என்று கேட்டார் குள்ள சாஸ்திரி,

  • நம் ஊர் தேர் தெப்ப மெல்லாம் அங்கே விடப் போருங்க. நாம் தான் முன் கூட்டியே போய் எல்லா இடங்களேயும் சுற்றிப் பார்த்து எந்த இடத்திலே தேர் விடறது, எந்த ஏரியிலே தெப்பம் விடறது என்பதை முடிவு செய்யனுமாம். டில்லி பஞ்சு லெட்டர் எழுதியிருக் கான். இப்ப அவன் ஒரே பிஸி. ஜப்பான் கவர்ன் மெண்ட்டோடு ஒவர் nஸ் கால் போட்டு ஓயாமல் பேசிண் டிருக்காணும். ஏக தடபுடல் பட்டுக் கொண்டிருக்கிற தாம்.??

பலே பலே! என்ருர் குள்ள சாஸ்திரி. 'உம்ம பேரே ஜப்பான் சாஸ்திரியாச்சே! அதேைல. உம்ம ஞாபகம் வந்தது. நாளேக்கே டில்லிக்குப் புறப்பட ணும். ரெடியாயிருங்க’’ என்ருர் அம்மாஞ்சி. ஜப்பானுக்குப் போன நல்ல விசிறியா நாலு வாங் கிண்டு வரணும். இந்த விசிறியிலே காத்தே வர மாட். டேங்கறது?’ என்ருர் ஜப்பான் சாஸ்திரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/20&oldid=924671" இலிருந்து மீள்விக்கப்பட்டது