பக்கம்:தெப்போ-76.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. தெப்போ - 76. ஜப்பான் பாஷை எப்போது கற்றுக் கொண்டீர் கள்? என்று குள்ள சாஸ்திரியை வியப்போடு கேட்டார். சர்ம்பசிவம்.

கய்ட் புக்லே இருக்கிறது. டுரிஸ்ட்களுக்கு வேண்டிய முக்கியமான வார்த்தைகளெல்லாம் அதிலே போட்டிருக்கு. மத்தியானம் படிச்சு வைத்தேன். அதிலே இப்படி ஒரு வார்த்தை இருந்தது. அடிச்சு விட்டேன்!?? என்ருர் குள்ள சாஸ்திரி பெருமையோடு.

எ டோக்கியோவிலிருந்து கின்ஸ்ாவுக்குப் போகனுமே, அப்ப என்ன செய்யப் போlங்க??? - இதே வார்த்தை தானே? 'கின்ஸா, ஸ்குயுகி மாஷோ என்பேன் என்ருர் குள்ள சாஸ்திரி. டோக்கியோ டவர் அருகில் பெரும் கூட்டம் கூடியிருந்: தது. அந்தக் கூட்டத்துக்கிடையில் இவர்கள் மூவர் மட்டும் பளிச் சென்று வித்தியாசமாகத் தெரிந்தார்கள். அமெரிக்க டுரிஸ்ட் ஒருவர் அம்மாஞ்சியைப் பார்த்து, வோட் இஸ் யுவர் நேம்??? என்று கேட்டார். 'அம்மாஞ்வதி’’ என்ருர் அம்மாஞ்சி. *ஓ! இட் ஸெளண்ட்ஸ் லேக் ஜாப்னிஸ்: என்ருர் அந்த அமெரிக்கர். அம்மாஞ்சி பெருமையோடு தம் கையிலிருந்த தக்ளியை ஒரு சுழற்றுச் சுழற்றி விட்டார். அது கிர் ரென்று. அழகாகச் சுழல்வதைக் கண்ட டுரிஸ்ட்டுகள், ஒண்டர் ஃபுல்!” என்றனர். மின்சாரமே இல்லாமல் எப்படிச் சுழல்கிறது பாருங் கள்?’ என்ருர் அம்மாஞ்சி. ஜப்பான் சாஸ்திரிகள் கையில் வைத்திருந்த பனை ஓலை விசிறியைப் பார்த்துவிட்டு, இது என்ன மெடீரியல்??? என்று கேட்டார் ஒரு அமெரிக்கர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/31&oldid=924683" இலிருந்து மீள்விக்கப்பட்டது