பக்கம்:தெப்போ-76.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 - 41 'டீ ஸெரிமனி என்ருல் என்ன செய்வாங்க? அதைப் பார்க்க வேண்டாமா??? என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி. 'அதற்கு இதுவா நேரம்? சாவகாசமாப் போய், நிதா னமா உட்கார்ந்து, ஆற அமர கவனிக்க வேண்டிய ஒரு கலே அது...’’ என்ருர் அம்மாஞ்சி. "ஆற அமர உட்கார்ந்து கவனித்தால் டீ ஆறிப் போயிடாதோ?’ என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி. ‘ஆமாம், ஆறிப் போயிடும். அப்புறம் திரும்பச் சுட வைத்துக் கொடுப்பாங்க. கர்மம் டீ ஸெரிமனின் ைஅது ஒரு சிராத்தம்னு சொன்னவர் தானே நீர்??? என்று தலை யில் அடித்துக் கொண்டார் அம்மாஞ்சி. இப்ப என்ன செய்யலாம்??? என்று கேட்டார் ஜப் பான் சாஸ்திரி, கோருக்கே போயிடலாம்.’’ என்ருர் அம்மாஞ்சி. இருவரும் காரை நெருங்கியபோது, சாம்பசிவ சாஸ் திரி காருக்குள் ஜம்மென்று உட்கார்ந்து விசிறிக் கொண்டி ருந்தார். அவரைக் கண்ட அம்மாஞ்சிக்குக் கோபம் கோப மாக வந்தது. - ஒய், எங்கே தொலைந்து போனிர்? உம்மைத் தேடித் தேடி இந்த கின்ஸா முழுவதும் அலேந்தோம். காலே போச்சு எங்களுக்கு?’ என்ருர் அம்மாஞ்சி. . நோனு தொலேந்து போனேன்? நீங்கதானே காணு மல் போயிட்டீங்க? கின் ஸாவிலே ஒரு கட்டடத்தின் மீது, உலகம் மாதிரி உருண்டையா ஒன்று சுற்றிக் கொண்டிருந் ததே, அதை அண்ணுந்து வேடிக்கை பார்த்துக்கொண்டி ருந்தேன். திரும்பிப் பார்க்கிறேன். உங்க ரெண்டு பேரை யும் காணுேம். எங்கே போனிர்கள் என்றே தெரியல்லே. சரி, எப்படியும் காருக்கு வந்து சேருவீங்கன்னு இங்கே வந்து உட்கார்ந்துட்டேன்’ என்ருர் சாம்பசிவம். தெ-3 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/42&oldid=924695" இலிருந்து மீள்விக்கப்பட்டது