பக்கம்:தெப்போ-76.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 7露

    • இந்தியாவுக்கு வரச் சொல்லு. வேண்டிய விசிறி தரேன். ஜப்பான் விசிறியின் அழகு உலகப் புகழ் பெற்றது. இவளுக்கு நம் ஊர் டனே ஒலே விசிறி பிடிச்சிருக்கு, இக் கரைக்கு அக்கரை பச்சை” என்ருர் ஜப்பான் சாஸ்திரி.
  • ரமேஷ், உன் கலியாணத்தில் பரதேசிக் கோலம் புறப்படுகிறபோது ஒரு விசிறி கொடுப்பார்கள். அதை இவளிடம் கொடுத்து விடு’’ என்று வேடிக்கையாகப் பேசினர் அம்மாஞ்சி. - -

ரமேஷ் தன் கைக் கடியாரத்தைப் பார்த்தான், மணி நாலாகி யிருந்தது.

  • புறப்படலாமா? நேரமாகிறது!?’ என்று கூறிய ரமேஷ் இகிடாவிடம் விடை பெற்றுக் கொண்டான். ஒரு டாக்ளியைக் கூப்பிட்டு சாஸ்திரிகளோடு ஒட்டலுக்குப் போய்ச் சேர்ந்தான்.

அங்கே அம்மாஞ்சி வாத்தியார் தயாரித்துக் கொடுத்த காப்பியைச் சாப்பிட்டு விட்டு நால்வரும் ஸ ஒப்பர் எக்ஸ் பிரலைப் பிடித்து டோக்கியோவுக்குப் புறப்பட்டார்கள். 'அடாடா! ரயில் என்ருல் இதல்லவா ரயில்? தனித் தனி எtட். ஒவ்வொரு எtட் மீதும் தும்பைப்பூ மாதிரி ஒரு வெள்ளேத் துணி!’’ என்று வியந்தார் அம்மாஞ்சி. 'இவ்வளவு துல்லியமா nட் மீது துணி போட்டு வைத்தால் நம் ஊரில் அழுக்காக்காமல் விட்டு வைப்பார் களா? என்று கேட்டார் சாம்பசிவம்,

  • முதலில் துணியையே விட்டு வைப்பார்களா? அதைச் சொல்லுங்க’’ என்ருர் அம்மாஞ்சி.

இங்கிருந்து டோக்கியோ போகிற வரைக்கும் லேனுக்குக் குறுக்கே ஒரு தட்டுத் தடங்கல் கிடையாதாம். வழியில் லெவல் கிராஸிங், ஆடு, மாடு எதுவும் இருக் காதாம். ரயில் ஒட்டத்தை எலெக்ட்ரானிக் ஸிஸ்டம்தான் மாரமே கண்ட்ரோல் பண்றதாம். லேன் மீது ஒரு தெ-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/74&oldid=924730" இலிருந்து மீள்விக்கப்பட்டது