உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.

தெய்வங்கள் 1 03

சரணங்கள்)

காலில் இடும்ாகை காதில் இட்டார்;

பீலியை மூக்கினில் வாங்கி இட்டார்;

தாலியைத் தம்முழங் காலில் மாட்டிக்

கோலியே வேகமாய்க் கண்ணனிடம் (சிங்காரம்)

பட்டாடை தன்னைக் கழுத்தில் கட்டிப்

பாங்குடன் ரவிக்கையை இடுப்பில் சுற்றி

ஒட்டியா ணத்தைத் தலையில் மாட்டி

ஒடியே வாரார்சில கோபியர் (சிங்காரம்)

ஜாடையாய்க் கண்ணன் குழலோ சைசில

செளந்தரி கேட்டே மெய்ம்மறந்து

ஆடை அவிழ்ந்ததை அறியா மல்வெகு

அவசர மாய்வரார் சிலகோபியர். (சிங்காரம்)

கோவிங் தன்குழல் நாதம் அந்தக்

கோபியர் கேட்டுடன் மெய்ம்மறந்து

ஆவலாய் எதிர்ந்திடும் ஆளனே மிரட்டிக்

காவல் கடந்து வரார்சில கோபியர். (சிங்காரம்)

கருமுகில் வண்ணன் குழலோசைதனைக் காதினிற் கேட்டு மோகமதாய்

அருமையாய்ப் பெற்ற மைந்தனே எறிந்து

அலங்கோல மாய்வராள் ஒருகோபி. (சிங்கார)

மாதவன் கீதவலேயினிலே மதிமயங்கிய கோபி அந்த

மாதராள் கண்ணுக்கு வழிதெரி யாமல் மதிலேறி விழுவாள் ஒரு கோபி. (சிங்கார)