பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் குறும்பு வாவாலே வண்ணு, வண்ணமுகக் கோபாலா, கன்னுக்குட்டி வாலுக்கும் சின்னப்பையன் குடுமிக்கும் ஒண்ண முடிஞ்சுகட்டிப் பஞ்சாய்ப் பறக்கடிப்பேன்.

கண்ணன் தாலாட்டு

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ! முத்தே, பவழமே, முக்கனியே, சர்க்கரையே, கொத்து மருக்கொழுந்தே, கோமளமே, கண்வளராய். ஆணிப் பசும்பொன்னே, ஆராத தெள்ளமுதே, மாணிக்க மே,எங்கள் வாழ்வே, கண்வளராய். அத்தை அடிச்சாளோ? அம்மான் அடிச்சானே? முத்துக்கண் ணிர்நிறுத்தி மோனமாய்க் கண்வளராய். பாட்டி அடிச்சாளோ, பால்வார்க்கும் கையாலேே வாட்டம் ஒழிந்து,ே மைந்தனே கண்வளராய். ஆயர் குலத்துதித்த அருமந்த மாமணியே, மாயனே, கண்ணு, மகிழ்வுடனே கண்வளராய்.