உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தெய்வங்கள்

சவுரி முடிகண்டேன்; தாழைமடல் குடக்கண்டேன். பின்னல் அழகுகண்டேன்; பிறைபோல

நெற்றிகண்டேன். சாந்துடன் நெற்றிகண்டேன்; தாயார்

வடிவம்கண்டேன். கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டுக்கண்டேன். மார்பில் பதக்கம்மின்ன மாலே அசையக்கண்டேன். கைவளையல் கலகலென்னக் கணையாழி

மின்னக்கண்டேன். தங்கஒட்டி யாணம் தகதகென ஜொலிக்கக்கண்டேன். காலிற் சிலம்புகண்டேன்; காலாழி பீலிகண்டேன். மங்கள நாயகியை மனம்குளிரக் கண்டுமகிழ்ந்தேன்.

(அடியாள் நான்.) அன்னேயே, அருந்துணையே, அருகிருந்து காரும் அம்மா! வந்த வினேஅகற்றி மகாபாக்யம் தாரும் அம்மா! தாயாகும் உன்னுடைய தாளடியில் சரணம்என்றேன்; மாதாவே, உன்றன் மலரடியில் நான்பணிந்தேன். (இதைச் சொல்லித் தீபத்தைப் பதினறு முறை

நமஸ்காரம் செய்வார்கள்.)