பக்கம்:தேன்மழை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகலிகை ஊர்நிறைந் திருக்கும் உலகின் திசையெலாம் பேர்நிறைந் திருந்தவன் வள்ளல் பேகன்! பேகன் தகுதியாற் பெரியவன்! தனித்த்மிழ்த் தாகம் தீராத் தலைவன் ஆவான்! அன்னவன் மனைவி குறுநெடுந் துணைவி நானொடு பிறந்த நங்கை, அந்தக் கனிமொழி மங்கையின் பெயரோ கண்ணகி!. கூடல்மா மதுரைக் கொற்றவன் ஒருவனால் கொலையுண் டிருந்த கோவலன் என்பான் கண்ணிர் மனைவியின் பெயரும் கண்ணகி! இத்தமிழ் நாட்டிலே இரண்டு கண்ணகியர் இருந்தாற் போலவே அகலிகை இருவர் வடவர் நாட்டிலே வாழ்ந்த தாக அந்நாட்டுச் சுவடிகள் அறிவிக் கின்றன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/108&oldid=926689" இலிருந்து மீள்விக்கப்பட்டது