பக்கம்:தேன்மழை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணக்க மாட்டேன் தேய்புரி பழங்க யிற்றைப் போன்றானைச் சிறப்பில் லானை வாய்மையும் சிறந்த வாக்கு வன்மையும் இல்லா தானை நோய்மத வெறிகொண் டானை நுண்ணறி வில்லா தானைத் தாய்மொழிப் பற்றில் லானைத் தையல்நான் மணக்க மாட்டேன். அரியநூல் புவிe துள்ளோர் அனைவர்க்கும் பொதுநூல் நீதி விருந்துநூல் மேல்கீழ் என்னும் வேற்றுமை நோயைத் தீர்க்கும் மருந்துநூல் அறிவில் மூத்தோன் வடித்தநூ லான முப்பால் திருக்குறள் கல்லா தானைத் திருமணம் செய்து கொள்ளேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/116&oldid=926697" இலிருந்து மீள்விக்கப்பட்டது