உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

439 வன்னிய வீரன் புதுவிடம் அன்னவன் உடலுட் புகுந்ததால் முத்தங் கொடுத்து முடித்தோன் முடிவிலோர் சத்தங் கொடுத்தபடி சாய்ந்தனன் மெத்தையில்! மூச்சு முடிந்ததால் பேச்சும் முடிந்தது. பிடியிடைப் பரத்தை பின்னர் மாண்ட மன்னவன் உடலை வாட்கொண்டு வெட்டி வெண்டுண்ட தலையை வேந்தனுக்குக் கனுப்பினாள். இரவல் வெற்றி ! பகைவன் தலையைப் பார்த்த மன்னன் தோள்தட்டிக் கொண்டே தொடர்ந்து சிரித்தனன் ஒத்தாசை செய்த ஒவியப் பாவைக்குப் பத்தா யிரம்பொன் பரிசாய் அனுப்பினான்! வேல் பாய்ந்தது தாசியின் சூழ்ச்சியால் தமையன் மாண்ட செய்தியைக் கேட்ட சேர்ந்தவ ராயன் இடிந்தான் உள்ளம் ஒடிந்தான் "அந்தோ அண்ணா!" என்றே அலறினான் அழுதான் ஓடினான் ஓடினான் தேடினான் தாசியை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/142&oldid=926723" இலிருந்து மீள்விக்கப்பட்டது