உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேன்மழை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாதே ! (சிந்து) தென்றலின் தங்கையவள்-செந் தேனின் கலசமவள் ! கன்னியோ அஞ்சுகின்றாள்-கருங் கடலே கனைக்காதே ! குளிர்பிறை போன்றவளாம்-மலர்க் கொத்தினை ஒத்தவாளம் ! கிளிமகள் அஞ்சுகின்றர்ள்-அல்லிக் கேணியே பொங்காதே ! உறவில் உறங்குபவள்-நிலவே உன்னைக்கண் டஞ்சுகின்றாள் ! மறைவில் நடப்பவற்றை-நீ மாந்தர்க்குச் சொல்லாதே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/157&oldid=926738" இலிருந்து மீள்விக்கப்பட்டது