பக்கம்:தேன்மழை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரந்தைக் கவியரசு வீங்குபுகழ் பெற்ற வேங்க டாசலம் பிள்ளை என்பார் பெருந்தமிழ்ப் புலவர் கற்றறிந் தொழுகிய கவிஞர் அவரோ ஆயிரம் நூற்கள் அடங்கிய தோர்நூல் போன்றவர்! இலக்கியப் புதுமை தந்தவர். அகநானூறது சுகநானூறு. பண்டைய புலவர்தம் பாட்டுப் படையல், அதற்கோர் புத்துரை அறிஞர் வழங்கினார் கட்டுரை தீட்டினார் கவிதைகள் நீட்டினார் அவசரக் கவிதைகள் அடிக்கடி பாடினார் அவரது பாடலில் நகைச்சுவை யதிகம் ! விருந்துப் புலவராம் வேங்க டாசலம் பிள்ளை யவர்கட்குப் பெரும்பண் டிதமணி 'கரந்தைக் கவியர' சென்னும் பட்டம் வழங்கினார் வழங்கி வாழ்த்தினார் கவிஞரை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/164&oldid=926745" இலிருந்து மீள்விக்கப்பட்டது